கஞ்சா மற்றும் குட்கா விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொற்றிக்கோடு காவல்துறையினர் அன்னிக்குளக்கரை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த மணிகண்டன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து முட்டைக்காடு வழிகலம்பாடு பகுதியில் இருக்கும் ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி […]
