பேருந்து நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த கஞ்சா பொட்டலங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி கிருஷ்ணகிரி காவல்துறையினர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேருந்து நிலையத்தில் கேட்பாரற்று 3 பெரிய டிராவல் பைகள் கிடந்தன. அந்த பையை காவல்துறையினர் திறந்து பார்த்தனர். அதில் 14 பண்டல்களில் ரூ.5 […]
