ஆயுர்வேத மூலிகை என கஞ்சா பார்சல்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கனடாவில் டோரோண்டோ நகரில் இருந்து சென்னையில் உள்ள ஒரு முகவரிக்கு ஆயுர்வேத மூலிகை என மூன்று பார்செல்கள் வந்தன.இந்த பார்சல் நேற்று முன்தினம்(பிப் 22) சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பார்சல் பார்த்து சந்தேகமடைந்தனர்.பின்பு அதிலுள்ள தொலைபேசி எண்ணையும் மற்றும் முகவரியில் விசாரித்தனர். அதில் உள்ள முகவரி தவறாக இருந்ததால் அந்த பார்சலை சுங்கத்துறை அதிகாரிகள் […]
