ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது காரில் கடத்தி வந்த 4 1/2 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் நேற்று முன்தினம் காலை தக்கலை அருகே திருவிதாங்கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது காருடன் நின்று கொண்டிருந்த இரண்டு பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் முன்னும் பின்னும் முரணாக பதிலளித்தனர். உடனே காவல்துறையினர் அந்த காரை சோதனை செய்து பார்த்தபோது சிறு சிறு […]
