சட்ட விரோதமாக வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள அம்பேத்கர் நகரில் சரவண பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டிற்கு முன்பு கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்து வருவதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சிலர் எருமப்பட்டி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சரவணபாண்டியன் வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அவரது வீட்டிற்கு முன்பு வாழை […]
