கஞ்சா செடிகளை வளர்த்து விற்பனைசெய்த விவசாயி உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தலைகுந்தா பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது கல்லட்டிலிருந்து ஊட்டியை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனையடுத்து இருசக்கர வாகனத்தில் சோதனை செய்தபோது அதில் கஞ்சா இலைகள் இருப்பது தெரியவந்துள்ளது. […]
