காரில் கஞ்சா கடத்தி வந்த 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகில் சிலேட்டர் அன்பு நகர் பகுதியில் காரில் கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக பெருந்துறை காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இத்தகவலின் பேரில் பெருந்துறை சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் காவல்துறையினர் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள்.அப்போது அந்த ரோட்டில் ஒரு கார் நின்றது. அதன் அருகே 8 பேர் கும்பலாக நின்றுகொண்டிருந்தன .அவர்கள் போலீசை பார்த்ததும் தெறித்து ஓட ஆரம்பித்தன. […]
