கஞ்சா எண்ணெயை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்ததோடு அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வண்ணார் பகுதியில் தடையை மீறி போதை பொருள் கடத்தி செல்வதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் கஞ்சா எண்ணெய் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். […]
