தேனி அருகே கஞ்சா விற்பதற்காக பொட்டலம் போட்டு கொண்டிருந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரம் பாண்டியன் நகரில் முற்புதருக்குள் சிலர் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பொட்டலம் போட்டுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் புதருக்குள் பொட்டலம் போட்டு கொண்டிருந்த ஐந்து இளைஞர்களை மடக்கி பிடித்தார்கள். மேலும் அவர்களிடம் இருந்த 12 கிலோ கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்கள், கஞ்சா விற்ற 14,200 […]
