அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியில் சவூதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் ரஷ்யா உள்ளது. அமெரிக்கா ரஷ்யாவிடம் தினசரி 7 லட்சம் பீப்பாய்கள் இறக்குமதி செய்கிறது. இந்நிலையில் அமெரிக்கா இந்த தடையை விதித்துள்ளதால் ரஷ்யாவின் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கும் […]
