கச்சநத்தம் படுகொலை வழக்கில் 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு கச்சநத்தம் கிராமத்தில் கோயில் திருவிழாவின் போது ஒரு தரப்பினர் நடத்திய தாக்குதலில் பட்டியலினத்தவர் 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய 27 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த நீதிபதி முத்துக்குமரன், அவர்கள் அனைவருக்கும் இன்று ஆயுள் தண்டனை வழங்கினார்.
