சுண்டைக்காய் இது இயற்கையாக கசப்பு தன்மை கொண்டிருந்தாலும் பல ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் இந்த காய்களை நாம் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். வாரத்திற்கு இரு முறையாவது இந்த காயை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். இதில் புரதம், கால்சியம் மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. ரத்த சம்பந்தமான நோய்களை குணப்படுத்துவதில் மிகவும் சிறந்தது. இது ரத்தத்தை சுத்திகரித்து உடல் சோர்வை நீக்கி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பெண்களின் எலும்புகளை வலுப்படுத்துகிறது. […]
