சென்னையில் சரியான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் 30 நாட்களுக்குள் கட்டட அனுமதி வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சியில் கட்டிட அனுமதி பெறுவதற்கு அந்த கட்டிட உரிமையாளர்கள் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு பெறப்படும் கட்டட அனுமதிக்கான விண்ணப்பங்கள் மீது அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உரிய கட்டணம் செலுத்தியதற்கான ரசீது கொடுக்கப்படுகிறது. அந்த விண்ணப்பத்தினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கட்டணத் […]
