செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி ரவீந்திரநாத், என்னை பொறுத்த வரைக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நிரந்தர பொதுச் செயலாளர் என்பது புரட்சித்தலைவி, மாண்புமிகு அம்மா என்பது நிரூபணம் ஆகியுள்ளது. நாடு போற்றும் நல்ல தீர்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. உற்சாகத்துடன் மகிழ்ச்சியுடன் தலைவணங்கி வரவேற்கின்றோம் அந்த தீர்ப்பினை. ஆகவே அந்த தீர்ப்பை மகிழ்ச்சியாக எல்லோரும் பகிர்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த நேரத்தில் ஊடகங்கள் வாயிலாக தமிழகம் முழுவதும் உள்ள நிர்வாகிகளும் […]
