செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், புரட்சித்தலைவி அம்மா மீது திமுக அடுக்கடுக்கான பொய் வழக்குகள் போடப்பட்டது, அந்த தெய்வத்தாய் இந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும், தொண்டர்களையும் காப்பாற்றுவதற்காக தான் அந்த நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் ஏறினார். 24 பொய் வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் போடப்பட்டது. அந்த பொய் வழக்கை எதிர்த்து ஒவ்வொரு நாளும் அவர் நீதிமன்றத்திற்கு சென்றார். எதற்காக, அவர் தன்னுடைய வாழ்வுக்காகவா, தன் பிள்ளைகள், குடும்பத்திற்காகவா ? சத்தியமாக இல்லை. […]
