தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட வடவீரநாயக்கன்பட்டி, தாமரைக்குளம் மற்றும் கெங்குவார்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களில் உள்ள 182.50 ஏக்கர் அரசு நிலங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் கூட்டணி அமைத்து, தனியாருக்கு பட்டா போட்ட விவகாரம் சார் ஆட்சியர் ரிஷப் நடத்திய விசாரணையில் அம்பலமானது. மேலும் 80 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் கனிமங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் பணிபுரிந்த நில அளவையர்கள், வட்டாட்சியர்கள் என 7 பேர் மீது மாவட்ட ஆட்சியர் முரளீதரன் நடவடிக்கை எடுத்தார் […]
