எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக செயல்படும் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட செயலாளர்களையும், மாநில நிர்வாகிகளையும் ஓ.பன்னீர்செல்வம் நியமித்துள்ளார். தன்னால் 88 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், 100க்கும் அதிகமான மாநில நிர்வாகிகளும் ஓ.பன்னீர்செல்வம் அணியில் செயலாற்றி வருகின்றனர். இந்நிலையில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உடன் சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையிலுள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை கூட்டத்தை இன்று நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது, எனக்கு சோதனை வந்தபோது என்னை தாங்கிப்பிடித்தது […]
