தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சியினரும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதுதான் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக மற்றும் திமுகவை பொறுத்தவரை ஒருவரை ஒருவர் மாறி மாறி குறை கூறிக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் ஸ்ரீரங்கத்தில் போட்டியிடவுள்ள அதிமுக வேட்பாளரை முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது, நகர்ப்புற உள்ளாட்சி […]
