அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாண பல்கலைகழகமானது கொரோனாவை கண்டறிய புதிய முறையிலான ஆய்வை மேற்கொண்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பொதுவாக மூச்சுத்திணறல், காய்ச்சல் ,இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டாலும் அதில் சுமார் 86 சதவீதம் நபர்களுக்கு வாசனை நுகர்வு திறன் இல்லாமல் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாண பல்கலைகழகமானது வித்தியாசமான ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதன்படி 8 விதமான சுவைகள் உடைய ஒரே நிறத்திலான மிட்டாய்களை பயன்படுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. […]
