திருப்பத்தூர் மாவட்டம் ஆதனூரில் அரசு மேல்நிலைப்பள்ளியில் தாவரவியல் ஆசிரியர் மாணவர்களை ரெகார்ட் நோட்டை எழுதிவந்து சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியிருகின்றார். இதில் சில மாணவர்கள் எழுதாததை ஆசிரியர் கண்டித்ததாக தெரிகின்றது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர் ஒருவர் ஆசிரியரை தகாத வார்த்தைகளால் பேசி அவரை தாக்க முயற்சி செய்துள்ளனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்ற நிலையில் சம்பந்தப்பட்ட மாணவர் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடவுளாக மதிக்க வேண்டிய ஆசிரியர்களை திட்டி தாக்க முயலும் அளவிற்கு மாணவர்களிடம் […]
