பெல்ஜியத்தில் வசிக்கும் ஓரினச்சேர்க்கையாளரான ஜெர்மன் நாட்டை சேர்ந்த தூதர் தன் துணைவரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெல்ஜியத்தில் வசிக்கும் ஜெர்மன் நாட்டு தூதரான உவே ஹெர்பர்ட் ஹான், கடந்த வெள்ளிக்கிழமை அன்று தன் துணைவரான வால்டர் ஹென்றி மாக்சிமிலியன் பயோட் மர்மமாக உயிரிழந்ததாக காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கிறார். அவர், தன் துணைவர் மது அருந்திவிட்டு மயங்கி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு உயிரிழந்ததாக கூறியிருக்கிறார். எனினும் உயிரிழந்தவரின் உடல், மற்றும் வீட்டை ஆய்வு […]
