ஸ்விட்சர்லாந்தில் அடுத்த வருடம் ஜூலை மாதத்திலிருந்து ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அனுமதி வழங்கப்படுவதாக அரசு தெரிவித்திருக்கிறது. ஸ்விட்சர்லாந்தில் Marriage for All என்ற அமைப்பு நடத்திய பிரச்சாரத்தின் முயற்சிக்கு வாக்காளர்கள் அனுமதி வழங்கியுள்ளனர். இந்நிலையில் மேற்கு ஐரோப்பாவில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதை சட்டபூர்வமாக்கிய நாடுகளில் கடைசியாக ஸ்விட்சர்லாந்தும் இணைந்திருக்கிறது. திருமணம் செய்த ஓரினச்சேர்க்கையாளர்கள், ஜனவரி மாதத்திலிருந்து அங்கீகரிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இச்சட்டத்தை ஆறு மாதங்கள் கழித்து நடைமுறைக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, அடுத்த வருடம் […]
