தமிழ்நாடு இந்திய மருத்துவ கழகத்தில் பதிவு செய்துள்ள பரம்பரை மருத்துவர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அரசு ஊழியர்களுக்கும் அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தமிழக இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்த பரம்பரை சித்த மருத்துவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட மருத்துவர்களுடைய வறுமையைப் போக்கும் விதமாக மாதம் 500 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. பின்னர் இந்த […]
