ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள தேனூர் கிராமத்தில் ஜோதிமுத்து(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். தற்போது ஜோதிமுத்து சோழவந்தான் ஜெனகை நாராயணபெருமாள் கோவிலில் இரவு காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது ஜோதிமுத்து நிகழ்ச்சி முடிந்த பிறகு வைகை ஆற்று […]
