வன்னியர்களுக்கு உரிய உள் ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுக்காமல் ஓயமாட்டேன் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதை ரத்துசெய்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது ஏமாற்றம் அளிக்கின்றது. ஆனாலும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு செல்லாது என்பதற்காக சென்னை ஐகோர்ட் பட்டியலில் உள்ள காரணங்களை சுப்ரீம் கோர்ட் நிராகரித்து இருப்பது மனநிறைவு அளிக்கிறது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் […]
