அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் காலாவதியாகி விட்டதா என்பது பற்றி பிரதான வழக்கில் தான் முடிவெடுக்க முடியும் என்று நீதிபதிகள் தெரிவித்து இருக்கிறார்கள். முன்னதாக தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்கள். இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு செல்லாது என்கின்ற தீர்ப்பின் முழு விவரம் வெளியாகி இருக்கின்றது. 128 பக்கம்: தனி நீதிபதியின் தீர்ப்பை இரத்து செய்து இரு நீதிபதிகள் அமர்வு, 128 பக்கங்களில் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. முன்னதாக இபிஎஸ் […]
