செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், ஒருங்கிணைப்பாளரை அலுவலகத்திற்குள் செல்ல வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை, இவர்களைப் போல் வன்முறையில் தாண்டவம் ஆடுகின்ற செயல்பாட்டில் கட்சியை அழிக்கின்ற விதத்தில் செயல்படக்கூடாது என்பதற்காக அண்ணன் ஓ. பன்னீர்செல்வம் அமைதியாக, பொறுமையாக, நிதானமாக எந்த சூழ்நிலையிலும் அதிமுகவை, மக்கள் செல்வாக்குள்ள இந்த இயக்கத்தை இழந்து விடக்கூடாது என்பதற்காக பொறுமையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். பொங்கிய நபர் காடாள்வார், பொறுத்தவர் பூமி ஆழ்வார். அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் அதிமுக ஆட்சியை நடத்துவார், அவர் […]
