மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 20 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான தெருக்களில் மழைநீர் தேங்கி வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் ஏழை எளிய மக்கள் பெரும் அவதி பட்டு கொண்டிருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் மழையை காரணமாக வைத்து காய்கறிகளின் […]
