இபிஎஸ் ஆல் ஒதுக்கப்படும் நிர்வாகிகளை ஓபிஎஸ் தன் பக்கம் இழுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கட்சியில் ஒற்றைத் தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பல்வேறு தடைகளை தாண்டி கடந்த 11-ஆம் தேதி பெரும்பான்மையான நிர்வாகிகளின் ஆதரவோடு இபிஎஸ் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பொதுச் செயலாளராக பதவியேற்ற பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்து நீக்கியதோடு, அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டார். […]
