முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய வந்ததில்லை. 80 வயதாகும் நான் தற்போது நேரில் சென்று ஆய்வு செய்து உள்ளேன். ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்க்கு முல்லை பெரியாறு அணை குறித்து பேசுவதற்கு எந்த உரிமையும் இல்லை என அவர் தெரிவித்தார். 30 ஆண்டு சராசரி கணக்குப்படி நவம்பர் 30-ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரம் […]
