சீரான முறையில் பால் வினியோகம் செய்யப் படுவதில்லை என ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மற்றும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் மற்ற சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதை விட விலை குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் ஆவின் பாலகத்தையே பெரும்பாலும் நாடுகின்றனர். இந்நிலையில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் பாலின் விலை குறைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது. […]
