ஒரத்தநாடு அருகே சசிகலாவுடன் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் சந்தித்து பேசி உள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சசிகலா தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதற்காக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பதாகவே சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு புறப்பட்டு சென்றார்.. தஞ்சாவூரில் திருமண விழாக்கள், கோவில் விழாக்கள், தொண்டர்களை சந்திப்பதற்கான நிகழ்ச்சிகள் ஆகியவை எல்லாம் இந்த சுற்றுப்பயணத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் திருமண நிகழ்ச்சியில் சசிகலா பங்கேற்பதற்காக சென்றுள்ளார்.. அப்போது ஒரத்தநாடு அருகே ஓவல்குடியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஓபிஎஸ் இன் […]
