லண்டனில், பேருந்து ஓட்டுநர் மீது எச்சிலைத் துப்பியதோடு மோசமாக பேசிய நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. லண்டனில் வெம்ப்ளே ஸ்டேடியத்திற்கு அருகில், ரூட் 83 என்ற பேருந்தில், ஒரு நபர் முகக்கவசமின்றி ஏறியிருக்கிறார். எனவே, ஓட்டுனர் அவரை முகக்கவசம் அணியுமாறு கூறியிருக்கிறார். ஆனால், அந்த நபர் முகக்கவசம் அணியவில்லை. எனவே, மீண்டும் ஓட்டுனர் அவரிடம், முகக்கவசம் அணியவில்லை என்றால் பேருந்திலிருந்து இறங்கி விடுங்கள் என்று கூறியிருக்கிறார். அப்போது, பேருந்திலிருந்து இறங்கச் சென்ற அந்த நபர், திடீரென்று ஓட்டுனருக்கு அருகில் […]
