மொபட் மீது கார் மோதி விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி அருகே சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்திவேல் என்ற மகன் இருக்கிறார். இவர்கள் 2 பேரும் பனைமரம் ஏறும் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் ஜம்பை பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரே உள்ள ஒரு கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் டீ குடித்துவிட்டு மொபட்டில் வீட்டிற்கு செல்வதற்காக ஏறினர். […]
