பாவெல் ஜென்ரிகோவிச் ஆன்டோவ் என்பவர் ரஷ்யாவின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கல்வி கொடையாளராக அறியப்பட்டவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒடிசாவிற்கு சுற்றுலா பயணத்திற்காக நண்பர்களுடன் வந்த போது ராயகடா பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இந்நிலையில் ஓட்டலின் மூன்றாவது தளத்தில் உள்ள ஜன்னல் வழியே கீழே விழுந்த அவர் மரணம் அடைந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். […]
