கிருஷ்ணகிரி மாவட்ட திமுக செயலாளரும் ஓசூர் எம்எல்ஏவுமான பிரகாஷ் மகன் கருணா சாகர் (24 ). இந்நிலையில் இன்று காலை கருணா சாகர் கர்நாடக மாநிலம் கோரமங்களா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கார் விபத்துக்குள்ளாகியது. இதில் கருணா சாகர் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை பெருங்களூர் மருத்துமனையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் அதிவேகமாக கார் இயக்கப்பட்டது தான் என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் இது தொடர்பாக மேலும் விசாரணையில்போலீசார் ஈடுபட்டுள்ளனர். […]
