அமைச்சர் பொன்முடி ஒரு விழாவில் கலந்துகொண்டு ஓசி பஸ்லதானே போறீங்க என பேசியது தமிழகம் முழுவதும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து கோவையில் மூதாட்டி ஒருவர் பேருந்து நடத்துனரிடம், எனக்கு ஓசி பயணம் வேண்டாம் எனக்கூறி பணம் கொடுத்து டிக்கெட் பெறும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது. ஆனால் அந்த மூதாட்டிக்கு பணம்கொடுத்து அ.தி.மு.க-வை சேர்ந்த பிருத்விராஜ் என்பவர் இந்த வீடியோவை எடுத்து இருக்கிறார் என பேச்சு எழுந்தது. அதன்பின் பிருத்விராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் பிருத்விராஜ் […]
