தமிழகத்தில் பள்ளி சொத்துகளுக்கு மாணவர்கள் சேதம் விளைவித்தால் அதற்கு மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் தான் பொறுப்பேற்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு மாணவர் சரியாக படிக்கவில்லை என்றால் உரிய ஆலோசனை வழங்க வேண்டும். பள்ளி சொத்துக்கு மாணவர்கள் சேதம் விளைவித்தால் சேதமான பொருட்களுக்கு மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் தான் பொறுப்பேற்று அதனை மாற்றி தர வேண்டும். பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி […]
