மலையாள சினிமாவில் பிரபலமான ஒளிப்பதிவாளராக திகழ்ந்தவர் சதீஷ் பப்பு. இவரை அனைவரும் செல்லமாக பப்பு என்று அழைத்தனர். இவர் துல்கர் சல்மானின் செகண்ட் ஷோ என்ற திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அதன் பிறகு கூதரா, ரோஸ் கிடாரினால், ஈனா, நான் ஸ்டீவ் லோபஸ் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் கடைசியாக அப்பன் என்ற திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்நிலையில் 44 வயதான சதிஷ் அமிலாய்டோசிஸ் எனும் அரிய வகை நோயினால் பாதிக்கப் பட்டிருந்தார். […]
