சிர்கான் ஏவுகணைக்கு, ஒலியின் வேகம் போன்று 9 மடங்கு வேகத்தில் பயணிக்கக்கூடிய திறன் இருப்பதாகவும், ரஷ்ய ராணுவத்திற்கான திறனை அதிகரிக்கும் என்றும் பிரதமர் விளாடிமிர் புடின் கூறியிருக்கிறார். சிர்கான் என்ற ரஷ்ய நாட்டின் ஹைப்பர்சானிக் ஏவுகணையானது, முதல் தடவையாக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டிருப்பதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்திருக்கிறது. இதற்கு முன்பு, கடற்படைக் கப்பலில் இந்த ஏவுகணையை தொடர்ந்து சோதனை செய்தனர். இந்நிலையில், தற்போது வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகமானது, இது தொடர்பில் தெரிவித்திருப்பதாவது, […]
