புதிதாக பல விளையாட்டுகளில் நமது இந்திய வீரர்கள் முதன்முறையாக தகுதி பெற்று ஒலிம்பிக்கு சென்றது பாராட்டுக்குரியது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டோக்கியோவில் தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த 127 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதுவரை இந்தியாவிற்கு 3 பதக்கங்கள் கிடைத்துள்ளது. ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதற்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி அனைத்து வீரர்களிடமும் காணொளி வாயிலாக பேசினார். தற்போது வீரர்கள் அனைவரும் ஊர் திரும்பிய பிறகு இரவு விருந்து அளிக்க இருப்பதாக கூறியுள்ளார். […]
