Categories
விளையாட்டு

ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம்: 50 கிலோ எடைப் பிரிவில் ….. சீமா பிஸ்லா தோல்வி ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை சீமா பிஸ்லா தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார் . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று மகளிர்  ஃப்ரீஸ்டைல் 50 கிலோ எடைப்  பிரிவுக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்று  போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய வீராங்கனை சீமா பிஸ்லா, துனிசியாவை சேர்ந்த சாரா ஹம்டியை எதிர்கொண்டார் . இதில் 1-3 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய வீராங்கனை சீமா  பிஸ்லா […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் மல்யுத்தம்: பஜ்ரங் புனியா அரையிறுதிக்கு தகுதி…..!!!!

32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இதில், ஒலிம்பிக் மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா காலிறுதிக்கு தகுதி பெற்றார்.  மல்யுத்தப் போட்டியில் ஆடவர் 65 கிலோ எடை பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கிர்கிஸ்தான் வீரர் எர்னாஸரை வீழ்த்தி இந்தியாவின் பஜ்ரங் புனியா காலிறுதிக்கு முன்னேறினார். இதையடுத்து மல்யுத்தம் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங்புனியா  அரையிறுதிக்கு தகுதி பெற்றார். 65 கிலோ எடைப்பிரிவில் 2-1 என்ற புள்ளி கணக்கில் […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் மல்யுத்தம் : பறிபோன பதக்க வாய்ப்பு ….. இந்திய வீரர் தீபக் புனியா தோல்வி….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள்  மல்யுத்த போட்டியின்  இந்திய வீரர் தீபக் புனியா தோல்வியடைந்தார் . டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் மல்யுத்த போட்டியில்  இந்தியாவை சேர்ந்த ரவிக்குமார் தாஹியா 57 கிலோ ப்ரீஸ்டைல் எடை பிரிவிலும் ,  தீபக் புனியா 86 கிலோ ப்ரீஸ்டைல் எடைப் பிரிவிலும்  பங்கேற்றனர். இதில் அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் தீபக் புனியா தோல்வி அடைந்தார். இதையடுத்து இன்று நடந்த வெண்கலப் பக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் தீபக் புனியா சான் மரினோ நாட்டை […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் மல்யுத்தம் : இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா …. வெள்ளிப் பதக்கம் வென்றார் ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் மல்யுத்த இறுதிப்போட்டியில்  இந்தியாவின் ரவிக்குமார் தாஹியாவுக்கு  வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. டோக்கியோ  ஒலிம்பிக்கில் இன்று  ஆண்களுக்கான 57 கிலோ ப்ரீஸ்டைல் எடை பிரிவுக்கான  இறுதிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா , நடப்பு உலக சாம்பியனான ரஷ்யாவை சேர்ந்த  ஜாவூர் உகுவேவை எதிர்கொண்டார். இதில் ரஷ்ய வீரரின் உடும்பு பிடியில் சிக்கியதால் ரவிக்குமார் தாஹியா புள்ளிகளை இழந்தார் .இதன் பிறகு சுதாரித்துக்கொண்ட ரவிக்குமார்  தாஹியா கடுமையாக முயற்சி செய்தார். ஆனால் […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் : 53 கிலோ எடைப் பிரிவில் …. இந்தியாவின் வினேஷ் போகத் தோல்வி ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் மல்யுத்த போட்டியில் கால்இறுதியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தோல்வியடைந்தார் .  32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது .இதில் இன்று காலை பெண்களுக்கான 53 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் கால்இறுதிக்கு முந்தைய சுற்று நடந்தது. இதில் இந்தியாவின் வினேஷ் போகத்  ஸ்வீடனை சேர்ந்த சோபியா மேக்டலினாவுடன்  மோதினார். இப்போட்டியில் வினேஷ் போகத் 7-1  என்ற கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறி இருந்தார் .இதையடுத்து […]

Categories
விளையாட்டு

இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் …. இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ரவிக்குமார் தாஹியா….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் மல்யுத்த போட்டி அரையிறுதி சுற்றில் இந்தியாவின்  ரவிக்குமார் தாஹியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆடவருக்கான 57 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில்  அரையிறுதி சுற்றில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா, கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சன்யேவை எதிர்கொண்டார்   . இதில் கஜகஸ்தான் வீரரை வீழ்த்தி ரவிக்குமார்  தாஹியா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.  இதன் மூலம்  இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது.

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் மல்யுத்தம் : இந்திய வீரர்கள் அசத்தல் …. அரையிறுதிக்கு முன்னேற்றம்….!!!

ஒலிம்பிக்கில் ஆடவர் மல்யுத்த போட்டியில் காலிறுதி சுற்றில் இந்திய வீரர்  தீபக் புனியா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் . டோக்கியோ  ஒலிம்பிக்கில் இன்று காலை நடைபெற்ற ஆண்கள் மல்யுத்தப் போட்டி நடைபெற்றது. இதில் 86 கிலோ எடை பிரிவுக்கான காலிறுதி சுற்றில் இந்திய வீரர் தீபக் புனியா, சீன வீரர் லின் சூசனை எதிர்கொண்டார் .இதில் 6-3  என்ற கணக்கில் வெற்றி பெற்ற தீபக் புனியா அரையிறுதிக்கு நுழைந்தார். அதேபோல் மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இந்திய […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக்: மகளிர் மல்யுத்த போட்டியில் …. இந்தியாவின் சோனம் மாலிக் தோல்வி …!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில்  பெண்கள்  மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை  சோனம் மாலிக் தோல்வி அடைந்தார் . 32 வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று பெண்களுக்கான 62 கிலோ பிரிவு  மல்யுத்தப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய வீராங்கனை சோனம் மாலிக் ,மங்கோலியா வீராங்கனை போலர்துயா குரெல்கூ ஆகியோர் மோதினர். ஆனால் புள்ளி கணக்கில்  அடிப்படையில் சோனம் மாலிக் தோல்வி அடைந்தார்.இப்போட்டியில் தோல்வியடைந்தாலும் அவருக்கு போட்டியில் தொடர்ந்து விளையாட மற்றொரு […]

Categories

Tech |