திருச்சியில் ரூ 655 கோடி மதிப்புள்ள 5,639 புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையில், புதிய புதிய துறைகளில் தமிழ்நாடு முதலீடுகளை ஈர்த்து வருகிறது. மற்ற மாநிலங்களிலிருந்து மட்டுமல்ல பல்வேறு நாடுகளிலிருந்தும் தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வருகின்றன. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு கோடியாவது பயனாளியை சந்திக்க உள்ளேன். மக்களுக்கு வீட்டுக்கே சென்று சிகிச்சை அளிக்க கூடிய மகத்தான திட்டம்தான் […]
