ரஷ்ய நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின், தங்கள் நாட்டின் ஒற்றுமை நாளில் இந்தியாவை புகழ்ந்திருக்கிறார். ரஷ்யா, சுமார் 8 மாதங்களுக்கு மேலாக உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், வருடந்தோறும் நவம்பர் மாதம் நான்காம் தேதி அன்று ரஷ்ய நாட்டின் ஒற்றுமை தினம் கடைபிடிக்கப்படும். அதன்படி நேற்று ஒற்றுமை தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்ததாவது, “இந்திய நாட்டை பாருங்கள், அங்கு உள்நாட்டு வளர்ச்சிக்குரிய […]
