கொரோனா வேகமெடுத்து பரவி வருவதால் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சிவகங்கையில் வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் வேகமெடுத்து வரும் கொரோனாவால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. அரசு பொது மருத்துவமனைகள் மற்றும் அரசு சுகாதார நிலையங்கள் ஆகியவ இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. […]
