ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களுக்குரிய ரேஷன் பொருள்களை நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடையில் இருந்தும் வாங்க முடியும். தங்களின் சொந்த மாநிலங்களில் என்ன பெற முடியுமோ அவற்றை வெளிமாநிலங்களில் இருந்தும் பெற முடியும். கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் அனைத்து தொழில் துறைகளும் முடங்கியது. மக்கள் தங்களின் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே வெளியில் வர அனுமதிக்கப்பட்டன. […]
