புதுச்சேரி மாநிலத்தில் குழந்தைகளுக்கு அதிக அளவில் காய்ச்சல் பரவி வருவதால் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மூட சுகாதாரத் துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு, பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:- புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாக 50 சதவீத குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. […]
