1,00,000 ஏக்கர் நிலம் காட்டுத் தீயில் எரிந்து நாசமாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் அரிசோனா என்னும் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் திடீரென்று 2 பகுதிகளில் பயங்கரமாக காட்டு தீ பற்றி எரிகிறது. இந்த காட்டுத் தீயினால் சுமார் 1,00,000 ஏக்கர் நிலம் எரிந்து நாசமாகியது. இதனையடுத்து காட்டுத் தீயின் காரணத்தால் அரிசோனா மாகாணத்திலிருக்கும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து காட்டுத்தீயை அணைக்கும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
