திருச்சி நவல்பட்டு எஸ்ஐ பூமிநாதன் கொலை வழக்கில் கைதான மணிகண்டனுக்கு ஒரு நாள் போலீஸ் காவல் கொடுத்து கீரனூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை அருகே ஆடு திருடி அவர்களை பிடிக்க சென்ற திருச்சி நவல்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகளை பிடிப்பதற்கு 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தனிப்படையை சார்ந்த காவல்துறையினர் திருச்சி மாவட்ட எல்லைப் பகுதிகளிலும், அதன் சுற்றுவட்டாரப் […]
