Categories
மாநில செய்திகள்

BREAKING : “குளிர்பானம் அருந்தி மாணவர் உயிரிழப்பு”….. இன்று முழு அடைப்பு….. ஆட்டோ, பேருந்து ஓடவில்லை…..!!!!

விஷம் வைத்து பள்ளி சிறுவன் பாலமணிகண்டன் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிராக பொதுமக்கள், வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிறுவன் மரணத்திற்கு நியாயம் கேட்டு காரைக்காலில் இன்று ஒரு நாள் வியாபாரிகள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், ஆட்டோக்கள், தனியார் பேருந்துகள் இயங்காததால் நகரம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடி காட்சி அளிக்கிறது. பதற்றமான சூழல் நிலவுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |